யாழ். பல்கலைக்கழக பீடங்கள் பெரும்பான்மை இனத்தின் கைகளில்..! வடக்கும் பறிபோகும் நிலையாம்

Sri Lankan Tamils University of Jaffna Northern Province of Sri Lanka
By Vanan Jul 30, 2023 02:12 PM GMT
Report

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றமையினால் எதிர்வரும் ஐந்து வருடங்களில் வட மாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை இல்லாது போய்விடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார். 

தமிழர்களின் அடையாள மாற்றம்

யாழ். பல்கலைக்கழக பீடங்கள் பெரும்பான்மை இனத்தின் கைகளில்..! வடக்கும் பறிபோகும் நிலையாம் | Jaffna University Faculties Are Sinhalese Hands

எனவே 13 ஆவது திருத்தத்தில் உள்ள பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இருப்பை நிலை நாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர்ந்த ஏனைய பீடங்கள் பெரும்பான்மை மாணவர்களை கொண்டுள்ளமை போன்று வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாற்றக்கூடிய வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு எனக் குறிப்பிட்ட வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் , தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை நோக்கியதாக அவர் கூறினார்.

மாகாணசபை அதிகாரங்களின் முக்கியத்துவம்

யாழ். பல்கலைக்கழக பீடங்கள் பெரும்பான்மை இனத்தின் கைகளில்..! வடக்கும் பறிபோகும் நிலையாம் | Jaffna University Faculties Are Sinhalese Hands

கிழக்கு மாகாணம் மூன்று சமூகங்களின் பிரதேசமாக உள்ளதுடன் முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்திலும் பார்க்க கூடுதலாக காணப்படுவதாக தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொண்டால் நிலங்களையும், கடல் வளங்களையும் பயன்படுத்தி பொருளாரத்தில் பலமடைய முடியும் என்பதுடன் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் பத்மநாதன் தெரிவித்தார்.

எனவே உரிய முறையில் மாகாணசபை அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அனைத்து கட்சிகள் உட்பட கல்வியலாளர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025