யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Jaffna
University of Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே இன்றையதினம்(09) ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முறுகல்
இதன்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி