கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! நேரலையில்..
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சிக்குண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பெருமெடுப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது குறித்த மாணவர்களின் போராட்டமானது பரமேஸ்வர வீதி ஊடாக பலாலி வீதியில் சென்றடைந்து தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான சூழ்நிலையினை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பான்மையின மாணவர்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பல்கலைக்கழக வாசல் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதோடு இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
















