யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (04) யாழ் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) முன் இடம்பெற்று வருகின்றது.
ஊழியர் சங்கதத்தின் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்கும் அரசிற்கும் தெரிவிப்பதற்காக இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கான தீர்வு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் தங்களது பிரச்சினைக்கான தீர்வு அளிக்கப்படவில்லை.
எங்களது பல்கலைக்கழகத்திற்கான பிரத்தியேக சேவைக்காக கொடுப்பனவு மற்றும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதை அரசுக்கு அறியத்தருகின்றோம்” என அவர் தெவித்துள்ளார்.
செய்திகள் - கஜிந்தன்
வவுனியா
வடக்கில் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பதாதைகளையும் ஏந்தியவாறு ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இந்த முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அ்தோடு, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (04) நண்பகல் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கபில்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 8 மணி நேரம் முன்
