யாழில் தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் மிக விரைவாகவும் அமைதியான முறையிலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என யாழ். மாவட்ட அசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் அனைவரும் தமது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை தாமதிக்காது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பெற்று கொவிட் 19 நோய் தொற்றுத் தாக்கத்திலிருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மேலும் ,தற்போதைய இறப்பு நிலைமையை ஆய்வுக்கு உட்படுத்திய போது 60 வயதிற்கும் மேற்பட்டோரில் இறப்பு எண்ணிக்கை ஆண்கள் 113 நணபர்களாகவும், பெண்கள் இறப்பு வீதம் அதிகமாக காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இதுவரையான அறிக்கைகளின்படி 70 வயதிற்கு மேற்பட்டோரில் இறப்பு ஆண்கள் 79 நபர்கள் ஆகவும் ,பெண்கள் 53 நபர்களாகவும் காணப்படுகிறது.
எனவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Covid-19 தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகமாக காணப்படுவதால் எவ்வித தயக்கமின்றி தடுப்பூசி விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கமைய உரிய தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு சென்று அடுத்துவரும் நாட்களில் விரைவாக தமது தடுப்பூசியைப் பெற்று Covid-19 தொற்றிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.