மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள்)

Sri Lankan Tamils Jaffna Human Right Day SL Protest
By Sathangani Dec 11, 2023 09:05 AM GMT
Report

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக 

தமிழீழ விடுதலை ஒன்றே ஈழத்தமிழரின் கனவு! நிமால் விநாயகமூர்த்தி

தமிழீழ விடுதலை ஒன்றே ஈழத்தமிழரின் கனவு! நிமால் விநாயகமூர்த்தி


தேசிய பாதுகாப்பு

“இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே என்ற பிரச்சினையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம்.

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள்) | Jaffna Vigilance Against Human Rights Violations

குறிப்பாக நீரியல்வளங்கள், நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவதுடன் அதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றது.

அதிலும் வட பகுதியில் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், இராணுவ சோதனை தடுப்பு அரண்கள், மக்கள் மீள்குடியேற்றப்படாமை போன்றவற்றால் இங்கு வாழ்கின்ற மக்களாகிய நாம் பெரும் சவாலையே எதிர்நோக்குகின்றோம்.

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய களியாட்ட நிகழ்வு!

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய களியாட்ட நிகழ்வு!


பொருளாதார கொள்கை

தற்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலைஅதிகரிப்பு,  சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை, இந்திய இழுவைப் படகு  எமது கடற்பரபில் கடற்றொழிலில் ஈடுபடுகின்றமை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், போதைப்பொருள் பாவனை, சமூர்த்தி கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கப்பெறாமை போன்ற சாவால்களையும் மக்களாகிய நாம் எதிர்நோக்குகின்றோம்.

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள்) | Jaffna Vigilance Against Human Rights Violations

அத்துடன் நாட்டின் பொருளாதார கொள்கை, நாட்டின் புதிய சட்ட மற்றும் சட்ட மூலங்கள் சர்தேச உடன்படிக்கைகள் மூலம் வட பகுதி மக்களாகிய நாம் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றோம்.

அதிலும் நாட்டின் முதலீட்டை அதிகரித்தல் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்கள் நடைபெறுகின்றது நடைபெற உள்ளது.

யாழில் தனியார் கல்வி நிறுவனம் அருகே கைதான இளைஞன் : வெளியான காரணம்

யாழில் தனியார் கல்வி நிறுவனம் அருகே கைதான இளைஞன் : வெளியான காரணம்


 மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் 

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி, விடத்தல்தீவு இறால் பண்ணை, கனிய மண் அகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் அட்டைப்பண்ணை, பொன்னாவெளி கிராம டோக்கியோ சீமேந்து தொழிற்ச்சாலை திட்டம்,  யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி என்பவற்றுடன் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள்) | Jaffna Vigilance Against Human Rights Violations

முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர் மலைவிவகாரம், திட்டமிட்ட மாகாவலி குடியேற்றங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை வட மாகாண பெண்கள் என்ற ரீதியில் எதிர்நோக்குகின்றோம்.

ஆகவே வட மாகாண பெண்கள் குரல் என்ற ரீதியில் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனுடன் மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024