மறுவாழ்விற்காக தாமாகவே முன்வந்த இளைஞர்கள்: யாழில் நடந்த சிறப்புச் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
யாழ் இளைஞர்கள் 10 பேர் தாமாகவே போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கு முன்வந்துள்ளனர்.
குறித்த விடயமானது யாழ் மாவட்டச் செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை (14) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுவாழ்வு
முன்வந்த இளைஞர்களை மறுவாழ்வுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மறுவாழ்வு சிகிச்சைக்காக தாமாக முன்வந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்