சரித் அபேசிங்க கைது! சஜித் பிரேமதாச விடுத்த அறிவிப்பு
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் தவறு செய்பவர்களுக்கோ அல்லது குற்றவாளிகளுக்கோ இடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நிச்சயமாக ஒரு ஒழுக்காற்று விசாரணையை நடத்தி, தேவைப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுப்போம். தவறு செய்பவர்களுக்கோ அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ எங்கள் கட்சியில் இடமில்லை. ஒரு விசாரணையின் மூலம் நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்,” என்றார்.
கைது நடவடிக்கை
சட்டத்தரணி ரக்கித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர் ரூ.100,000 லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.

2023 ஆம் ஆண்டு ஹரக் கட்டா என அழைக்கப்படும் பாதாள உலக குற்றவாளியான நதுன் சிந்தக விக்கிரமரத்ன தொடர்பில் மேற்படி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 22 நிமிடங்கள் முன்