சனத் நிஷாந்தவிற்கு பதிலாக சத்தியப்பிரமாணம் செய்த ஜகத் பிரியங்கர
இரண்டாம் இணைப்பு
சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பதிலாக ஜகத் பிரியங்கர இன்று (08) நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மகிந்த யாப்பா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முதலாம் இணைப்பு
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜகத் பிரியங்கர இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
அவர் நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய எல்.கே.ஜகத் பிரியங்கர 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 40,527 வாக்குகளை பெற்றிருந்தார்.
பதவிக்கு தெரிவு
இதன்படி, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மரணத்தை தொடர்ந்து அவரது பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தற்போது தங்கியுள்ள இல்லத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கோரிக்கை
விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் சாரதியின் நடத்தைகள் தொடர்பிலும் சிக்கல் நிலை காணப்படுவதாக முன்னாள் சனத் நிஷாந்தவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தமது கணவரின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |