இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை : வைரலாகும் இணைய பதிவு
எரித்திரியா நாட்டில் நிலவி வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆண்களின் தொகை குறைந்துள்ளதால் அங்குள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமுக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
எரித்திரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக, ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஆண்களை விட பெண்களின் தொகை அதிகமாக இருப்பதால், அரசாங்கம் இரண்டு திருமணம் என்ற பழங்கால பாரம்பரியத்தை அங்கீகரித்து அதை சட்டமாக்கியுள்ளது என்றும் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆண்களுக்கு சிறைத்தண்டனை
அவ்வாறு இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த செய்தி பொய்யானது என தெரியவந்துள்ளது.
பொய்யான தகவல்
பிபிசி அறிக்கையின்படி, இரண்டு முறை திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எரித்திரியா அரசாங்கம் எந்த சட்டத்தையும் இயற்றவில்லை.

முன்னரும் எரித்திரியா போலவே ஈராக் மற்றும் சூடான் நாட்டிலும் இது போன்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஏற்கனவே சமூக ஊடக பதிவுகள் வைரலாகின. ஆனால் அது போன்ற சட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்நாடுகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.