21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் முயற்சி - இன்னும் சில மணித்தியாலங்களில் விண்ணுக்கு!
உலகிலேயே மிகவும் பெரிய விண்வெளி தொலைநோக்கி இன்னும் சில மணித்தியாலங்களில் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.
10 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் என்ற இந்த தொலைநோக்கி பிரான்ஸ்சின் கியானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.
ஐரோப்பாவின் ஏரியன் உந்துகணை மூலம் இந்த தொலைநோக்கியானது விண்வெளிக்கு செலுத்தப்பட்டு, விண்வெளி ஒழுக்கில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வடிவமைப்பதற்கு 30 ஆண்டுகள் எடுத்துள்ளதுடன், 21 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய அறிவியல் முயற்சிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
பிரபஞ்சத்தில் பிரகாசிக்கும் முதல் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களைக் காட்டும் முயற்சியின் கீழ் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு செலுத்தப்படுகின்றது.
தொலைவில் உள்ள கிரங்களின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கும் அங்கு இருக்கும் உயிர்கள் மற்றும் வாயுக்கள் தொடர்பில் கண்டறிவதற்கும் இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
