ஜம்மு காஷ்மீரில் விடாது பொழியும் வெள்ளை மழை : மக்கள் பெரும் திண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வீதிகள் எங்ஙனும் பனி படர்ந்து மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 30 வரையிலான 40 நாட்கள் 'சில்லாய் காலன்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலமாகும்.
உச்சக்கட்ட குளிர்
தற்போது அந்த உச்சக்கட்ட குளிர் நிலவி வருகிறது. பள்ளத்தாக்கு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
#WATCH | Jammu and Kashmir | Fresh snowfall covered the mountains in Sonamarg, attracting tourists from all over the country. pic.twitter.com/3hxC2m9E59
— ANI (@ANI) January 24, 2026
எங்கு பார்த்தாலும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போலபனி படர்ந்துள்ளது. இந்த பனிப்பொழிவால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் பல அடி உயரத்திற்குப் பனி தேங்கியுள்ளதால், முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
Udhampur Police coming through in real time. ❄️
— Go Jammu and Kashmir (@GoJammukashmir) January 24, 2026
12 people, including women and children, rescued from a heavy snowstorm in the upper ridges of Basantgarh.
Trekked kilometres through snow and fog, brought everyone to safety, food, shelter, and medical aid ensured.
This is what… pic.twitter.com/BoWnlE7iT6
மேலும் தொடருந்து சேவை மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் பனியை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
VIDEO | Katra, Jammu and Kashmir: Heavy snowfall blankets Shri Mata Vaishno Devi shrine. Visual of snow-clad Trikuta Hills.
— Press Trust of India (@PTI_News) January 24, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)#Katra #VaishnoDevi #Snow pic.twitter.com/WWRpNlsZbf
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |