ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் - மக்களிடையே பெரும் அச்சம்
earthquake
people
japan
By Vasanth
ஜப்பானில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நாமி கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.0 ரிக்டர் அளவில் முதலாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், அதனை தொடர்ந்து 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
ஆனால், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும், கடல் அலைகள் உயரமாக எழும்பும் என்றும் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது. இதனால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.