சிறிலங்காவிற்கான உதவிகளை குறைத்தது ஜப்பான்?
srilanka
colombo
help
japan
economy
crisis
By S P Thas
சிறிலங்காவிற்கான உதவிகளை ஜப்பானிய அரசாங்கம் குறைத்துக் கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2020ம் ஆண்டில் சிறிலங்காவிற்கு ஜப்பான் வழங்கிய மொத்த உதவிகள் 94 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் 42.7 பில்லியன் யென் உதவி வழங்கிய ஜப்பான் அரசாங்கம் 2020ம் ஆண்டில் இந்த தொகையை 1.4 பில்லியன் யென்களாக குறைத்துக் கொண்டுள்ளது.
ஜப்பானின் உதவியுடன் நிர்மானிக்கப்படவிருந்த இலகு ரயில் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் ரத்து செய்ததனைத் தொடர்ந்து இவ்வாறு உதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாக குறித்த தெற்கு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி