இலங்கைக்கு உதவுவது தொடர்பில் ஜப்பான் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

International Monetary Fund Sri Lanka Government Of Sri Lanka Japan
By Kanna Sep 23, 2022 03:10 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறை விடயத்தில் இலங்கைக்கு ஜப்பான் ஆதரவு வழங்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடாக்கி மிசுகொஷி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களில் ஒருவரான ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உட்பட ஏனைய கடன் வழங்கும் நாடுகளுடன் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்க விரும்புவதாக ஹிடாக்கி மிசுகொஷி குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மொத்த இருதரப்புக் கடன் 10 பில்லியன் டொலர்களாக காணப்படுவதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 வீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இருதரப்பு கடனில் சுமார் 3.5 பில்லியன் டொலர்களை ஜப்பான் வழங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. கடன் பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் போதிலும், இலங்கையின் பொருளாதாரம் மீண்ட பின்னரே பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் தூதுவர் மிசுகோஷி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் இலங்கை

இலங்கைக்கு உதவுவது தொடர்பில் ஜப்பான் வெளியிட்ட புதிய அறிவிப்பு..! | Japan Helps To Srilanka Debt Restructuring Process

கட்நத 2020 ஆம் ஆண்டில், வர்த்தகத் தலைநகரான கொழும்புக்கான 1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடரூந்து திட்டத்தை, நிதிச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியது.

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை மறுசீரமைத்து, முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர், பொருளாதார மீட்பிற்கான கடன் உதவியை பெறுவதற்கு ஏற்கனவே கடன் வழங்கிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021