இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
sri lanka
japan
travel
By Vanan
இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை (20) முதல் நீக்கப்பட்டுவதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் அதிகரிப்பினால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பானின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில நாடுகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.