ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வரப்போகும் ட்ரோன்கள்
ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
கடல்கண்காணிப்பை மேற்கொள்ளும்பொருட்டு இந்த ட்ரோன்கள் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளன.
சந்திப்பில் எட்டிய உடன்பாடு
டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் நேற்று(29) நடத்திய சந்திப்பின் போது, இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
Met with Japanese PM @shigeruishiba this morning in Tokyo. We discussed strengthening ties in trade, investment, development & regional security. I expressed gratitude for Japan’s support in debt restructuring & ongoing assistance to Sri Lanka’s growth, including the BIA… pic.twitter.com/bK6Q1cWe5E
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 29, 2025
ஜப்பானின் அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
“இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய புள்ளியில் அமைந்துள்ள இலங்கையின் உறுதித்தன்மை மற்றும் அபிவிருத்தி மிகவும் முக்கியமானது” என்று இருதரப்பு பேச்சுக்களுக்குப் பின்னர், நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜப்பானிய பிரதமர் இஷிபா குறிப்பிட்டுள்ளார்.
பால் பண்ணை விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவி
இதற்கு பதிலளித்துப் பேசிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமைதியான மற்றும் நிலையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலைமையை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறு பால் பண்ணை விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்திலும் இரு அரசாங்கங்களும் கையெழுத்திட்டுள்ளன.
புளிக்கவைத்தல் மற்றும் உலர்த்துதல் கருவிகளுக்கு ஜப்பான் 463 மில்லியன் யென் கொடையை வழங்கவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
