மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ; ஜப்பான் ஆதரவு வழங்குவதாக உறுதி

By Sathangani Aug 17, 2023 07:49 AM GMT
Report

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ; ஜப்பான் ஆதரவு வழங்குவதாக உறுதி | Japan Support To The Upcountry People Sri Lanka

இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தற்போதைய செயல்திறன் மற்றும் அதனை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது குறித்தும் சுகாதார பாதுகாப்பான நீர் உற்பத்தி ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன் சூரிய சக்தி மின் திட்டத்துக்கான முதலீடுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பம் பற்றி ஆராய்கையில், ஜப்பானிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க  JICA பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மலையக மாற்றத்திற்கான புதிய திட்டங்கள்

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ; ஜப்பான் ஆதரவு வழங்குவதாக உறுதி | Japan Support To The Upcountry People Sri Lanka

பெருந்தோட்டத்துறையின் மறுசீரமைப்பு தொடர்பான தமது திட்டத்தை அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார். பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. மலையக மாற்றத்திற்கான புதிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

தொழிலாளர்களின் கௌரவத்தை உயர்த்துவதற்கும் தோட்டத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அமைச்சரின் அர்ப்பணிப்பு அனைத்துத் தரப்பினரிடமும் ஆழமாக எதிரொலித்தது.

மலையக மக்களின் வரலாற்று ரீதியிலான பங்களிப்பை ஆவணபடுத்துவதற்கான திட்டம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. மலையக பெருந்தோட்ட சமூகங்களின் நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவு வழங்கப்படும் என JICA பிரதிநிதிகள் சந்திப்பில் உறுதியளித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025