அடுத்த தலைமுறைக்கான விமானம்! சாதனை படைத்த ஜப்பான்
ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய ரக விமானங்களானது எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி இந்தத் திட்டத்திற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது தொழில்நுட்பத்திலும், உலகமயமாக்களிலும் ஜப்பானை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக கூறியுள்ளது.
விமான உற்பத்தி
பசுமைப் புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாகவுள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஐதரசன் எரிபொருள் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் முதற்கட்டமாக 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டு விமான உற்பத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த ஆண்டின் (2024) இறுதிக்குள் ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நவீன தொழிநுட்ப நகரமானது பயன்பாட்டிற்காக அறிமுகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |