இலங்கையில் நிறுத்தப்பட்ட தொடரூந்துத் திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்
ஜப்பானின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் இலகு தொடரூந்துத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பான செலவுகளை இலங்கையே ஈடு செய்ய வேண்டும் என ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தூதுக்குழுவினருடன் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலகு தொடரூந்துத் திட்டம்
இலங்கையில், 1.5 பில்லியன் டொலர் செலவில் இலகு தொடரூந்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கபட்டது.
இந்நிலையில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இந்தத் திட்டத்தை நிறுத்துமாறு கூறியிருந்தார்.
இது திட்டம் நெரிசலான தலைநகர் கொழும்பிற்கு "செலவு குறைந்த தீர்வு" அல்ல என்று அந்த வேளையிலே அவர் தெரிவித்திருந்தார்.
15.7 கிலோமீட்டர் (9.8 மைல்கள்) க்கு மேல் 16 நிலையங்களை உள்ளடக்கிய இலகு தொடரூந்து சேவை அதன் ஆரம்ப கட்ட கட்டுமான பணிகளின் போதே நிறுத்தப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
இதனை தற்போது மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமானால் அதன் ஆரம்பகட்ட செலவுகளைத் தீர்க்கப்படவேண்டியது அவசியம் என ஜப்பான் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜப்பானிய நிதி அமைச்சரின் செய்தியை எடுத்துரைத்தார்,
மேலும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு, திட்டத்தை நிலைநிறுத்துதல் மற்றும் நிறுத்தப்பட்ட முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு வசதியாக இரத்து செய்யப்பட்ட இலகு தொடரூந்து திட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலுவைகளை திருப்பிச் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |