ரணிலுக்கு நேரடியாகவே விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை..!

Ranil Wickremesinghe Japan Sri Lanka Relationship Japan
By Kiruththikan Jul 25, 2022 06:21 AM GMT
Report

ஜப்பான் நாட்டின் உதவி 

காலி முகத்திடலில் இடம் பெற்ற சம்பவம் போன்று இன்னும் ஒரு வன்முறை சம்பவம்  நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே ம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களை கடந்த (22) மாலை சிறிலங்கா அதிபர் மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பின் போதே ஜப்பானிய தூதுவர் இது போன்ற வன்முறை சம்பவங்களை இன்னும் ஒரு தடவை ஏவி விடுவீர்களாக இருந்தால் ஜப்பான் அரசாங்கத்தின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என எச்சரித்துள்ளார் எனவும் ஜப்பானிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ரணிலுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி

ராஜபக்சக்களின் பிரதான முகவராக ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் எனவும் அவர் மூலமே ராஜபக்சர்கள் தங்கள் ரகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் எனவும் சிறிலங்கா அதிபர் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதித்தன்மையுடன் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது..

நாடாளுமன்ற இரகசிய வாக்கெடுப்பு முறையில் இடம்பெற்ற தேர்தலில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க புதிய  அதிபராக தெரிவுசெய்யப்பட்டார்.

இருப்பினும் அதிபர் தேர்தலின் இறுதி கணம் வரை ரணிலை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு அதிக கட்சிகளின் ஆதரவு வெளிப்படுத்தப்பட்ட போதும் 81 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருந்தார்.

இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பு முறை என்பதால் வெளிப்படையாக டலஸ்க்கு ஆதரவு அளித்துவிட்டு திரை மறைவில் ரணிலுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது என்றும் அதிபர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டியது ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020