இரண்டாவது தடவையாகவும் நடாளுமன்றம் செல்லும் ஜயந்த கெட்டகொட!
SriLanka
Jayantha Kettagoda
Member Of Parliament
Mahinda Yapa Abewarthana
By Chanakyan
ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா பொதுசன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில் மீண்டும் ஜயந்த கெட்டகொட அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
9வது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட ஏற்கனவே செயற்பட்டிருந்த நிலையில், பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசத்திற்காக பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.