இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய (Sanath Jayasuriya) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தகவலை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (Sri Lanka Cricket Association) இன்று (07.10.2024) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சனத் ஜயசூரிய 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் - 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையான காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுவார்.
கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு
இதற்கு முன்னர் இந்தியா (India), இங்கிலாந்து (England) மற்றும் நியூசிலாந்து ( New Zealand) ஆகிய நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்திய திறமைகளை கருத்திற்கொண்டு சிறிலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மேலும், துடுப்பாட்டத்தில் சகலதுறை வீரராக விளங்கிய இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.
மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்திருந்தநார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகல துறை வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக தேர்வுசெய்யப்பட்டதுடன், 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |