பதவி விலகும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூர்ய, வரவிருக்கும் ரி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தலைமை பயிற்சியாளராக தனது ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும் என்றாலும், தலைமை பயிற்சியாளராகத் தொடரும் எண்ணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
மொத்த வெற்றி - தோல்விகள்
ஜயசூர்ய முதலில் 2024 ஜூலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார், ஆனால் அந்த ஆண்டின் இறுதியில் முழுநேர அடிப்படையில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஜயசூர்ய தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில், இலங்கை அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 60 போட்டிகளில் விளையாடியுள்ளது, 29 போட்டிகளில் வெற்றியும் 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
அத்தோடு, அவரது காலத்தில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்த போட்டிகளின் எண்ணிக்கை இரண்டு ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |