சென்னையில் விமர்சையாக நடந்த ஜீவன் தொண்டமானின் திருமண விழா: ரணிலும் பங்கேற்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23.11.2025) திருமண பந்தத்தில் இணைந்தார்.
அதன்படி, ஜீவன் தொண்டமான் இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்பவருடன் திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார்.
ரணில் பங்கேற்பு
அதன்படி, அவருடைய திருமணம் இன்று (23.11.2025) சென்னையின் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரது மனைவி மற்றும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜீவன் தொண்டமானின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்தியாவில் திருமண விழாவினைத் தொடர்ந்து இலங்கையில் கொழும்பு மற்றும் கொட்டகலயில் திருமண வரவேற்புகள் நடைபெறவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

