தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்த ஜீவன் தொண்டமான்!
புதிய மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் தொகுதிவாரியான தேர்தல் முறைமையில் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு தமது மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக விரிவான கலந்துறையாடலொன்று இடம்பெற்றது எனவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
