18 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அனுப்புவோர் மீது நடவடிக்கை!
மலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்காக, தொழில் பயற்சி நிலையம் ஊடாக தொழில் பயிற்சி திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வகையான விசாரணைகளைக் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், 15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியமை தொடர்பிலும், அவரின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளைக் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 1 மணி நேரம் முன்