நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு : நீதிமன்றத்தை நாடவுள்ள இ.தொ.கா

Sri Lanka Jeevan Thondaman Local government Election
By Raghav Mar 21, 2025 05:19 AM GMT
Report

கொத்மலை (Kotmale) மற்றும் மஸ்கெலியா (Maskeliya) பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (20.03.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு," கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

வடக்கில் பாரிய அதிர்வலை - அர்ச்சுனா அணி, சங்கு, மான், சைக்கிள் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

வடக்கில் பாரிய அதிர்வலை - அர்ச்சுனா அணி, சங்கு, மான், சைக்கிள் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நிர்வாக தவறு

நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது.

ஏனைய தொகுதிகளில் எமது நிலைவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்." என்றார்.

செய்திகள் : க.கிஷாந்தன்

திருகோணமலை மாவட்டம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (20) மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்திருந்தது.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு : நீதிமன்றத்தை நாடவுள்ள இ.தொ.கா | Jeevan Thondaman To Go To Court

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 126 உம், சுயேட்சை குழுக்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 12 உம் தாக்கல் செய்திருந்தனர்.

அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 23 உம், சுயேட்சை குழுக்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 03 உம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இம்முறை தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 103 உம், சுயேட்சை குழுக்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 09 உம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வெடித்துள்ள வேட்புமனுக்கள் சர்ச்சை : சுமந்திரனை நாடிய சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழில் வெடித்துள்ள வேட்புமனுக்கள் சர்ச்சை : சுமந்திரனை நாடிய சுரேஷ் பிரேமச்சந்திரன்

அர்ச்சுனா எம்பி மீது விதிக்கப்பட்ட தடை : சபையில் கொந்தளித்த சிறீதரன்

அர்ச்சுனா எம்பி மீது விதிக்கப்பட்ட தடை : சபையில் கொந்தளித்த சிறீதரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016