இங்கிலாந்தில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட ஜீவன் தொண்டமான்

Sri Lanka Upcountry People Ceylon Workers Congress Jeevan Thondaman England
By Shadhu Shanker Oct 25, 2023 12:12 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கடந்த 19 ஆம் திகதி இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்ததுடன், முக்கிய சந்திப்புகளிலும் ஈடுபட்டார்.

மலையக பெருந்தோட்டம் உள்ளிட்ட இலங்கையின் நிலவரம் பற்றியும் அவர் விளக்கமளிப்புகளை மேற்கொண்டார்.

இங்கிலாந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடும் நோக்கில் இங்கிலாந்து சென்றிருந்த  ஜீவன் தொண்டமானை, அந்நாட்டின் விளையாட்டு, சுற்றுலா, சிவில் சமுக மற்றும் சமத்துவ அமைச்சர் ஸ்டவுட் என்ரூ மற்றும் இங்கிலாந்து பிரபுகளின் சபை உறுப்பினர் நிக் ஹர்பட் பிரபுவும் வரவேற்றார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையில் பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், பெருந்தோட்ட சமூகத்தின் வரலாற்று ரீதியிலான போராட்டங்கள், கலாசாரம் மற்றும் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கிய மகத்தான பங்களிப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

இங்கிலாந்தில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Went To England

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் கோரிக்கை

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் கோரிக்கை

நல்லிணக்க முயற்சி 

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ளதை நினைவுகூரும் இத்தருவாயில், காணி உரிமை, புதிய வீட்டு திட்டம் உட்பட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இலங்கை குறித்தான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG) மற்றும் நீர், சுகாதாரம் தொடர்பான குழு ஆகியவற்றின் இணைத் தலைவராக செயற்படும் மெத்தீவ் ஓப்போர்ட் உடனும் அமைச்சர் முக்கிய சந்திப்பை நடத்தி இருந்தார்.

நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் நீர்த்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு உட்பட இலங்கையில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் இச்சந்திப்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கையில் நீர்வழங்கல் துறைக்கு பிரிட்டன் நீர்வழங்கல் துறையின் ஒத்துழைப்பை பெறுவதற்கான முயற்சியிலும் அமைச்சர் ஈடுபட்டுள்ளார். உலகளாவிய நீருக்கான அணுகலை உறுதி செய்வதில் தனியார் துறையின் விரிவாக்கப்பட்ட பங்களிப்பு மற்றும் முதலீடுகளையும் அமைச்சர் ஊக்குவித்துள்ளார்.

இங்கிலாந்தில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Went To England

வட்டமேசை மாநாடு

மேற்படி சந்திப்புக்கு பின்னர், Baroness Barker இன் வழிகாட்டலுடன் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலங்கை தொடர்பான வட்டமேசை விவாதத்துக்கும் அமைச்சர் தொண்டமான் தலைமை தாங்கினார்.

நல்லிணக்கம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உட்பட பல துறைகளில் இலங்கை அடைந்துவரும் முன்னேற்றம் பற்றி அமைச்சர், மேற்படி குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.

நல்லிணக்கம் உட்பட இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் குறுகிய நோக்கங்களுக்காக பரப்படும் எதிர்மறைவான, போலியான தகவல்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இப்படியான தகவல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், புலம்பெயர் இலங்கை சமூகமும் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட சமூகத்துக்கான வரலாற்று தருணம் அமைச்சரின் இங்கிலாந்து நாடாளுமன்ற விஜயமானது, மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு முக்கியத்துவம்மிக்கதாக அமைந்தது.

அதேபோல பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பான அமைச்சரின் அதிக ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றது.   

உலக ஒழுங்கில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய ஹமாஸ்! ஈழத் தமிழர்கள் யார் பக்கம்... (காணொளி)

உலக ஒழுங்கில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய ஹமாஸ்! ஈழத் தமிழர்கள் யார் பக்கம்... (காணொளி)

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024