தமிழரசு கட்சியின் உட்பகை வேட்டை : சுமந்திரனை குற்றம் சாட்டும் முக்கிய புள்ளி
தமிழரசு கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரனின் (M. A. Sumanthiran) சதி முயற்சியால் தான் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் (14.04.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழரசு கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரனின் சதி முயற்சியால் தான் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டேன்.
பிரதேச சபை தேர்தல்
இதன் காரணமாகவே தற்பொழுது சுயேட்சையாக பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தேன்.
ஆனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த எனது வேட்ப்பமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல, பாரியளவில் பணத்தை செலவு செய்வதற்கு என்னிடம் வசதி இல்லை.
லட்சம் ரூபாய் பணத்தை செலவு செய்யது வழக்கு தாக்கல் செய்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் இத்தேர்தலில் தாம் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும் வரையில் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஓயப் போவதில்லை” என கரைச்சு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
