பயங்கரவாத தடைச் சட்டத்தை கையாளும் அநுர அரசு : சுட்டிக்காட்டும் முக்கிய புள்ளி
தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர (Anura Kumara Dissanayaka) அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (15.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிவந்த இந்த முற்போக்குவாதிகளுக்கு, கடந்த கால ஆட்சியாளர்களைக் காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுவதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜேவிபிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும், அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப சர்வதேசத்துக்கு முன்னால் தங்களது தோற்றப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர் எனவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
