விமானங்களுக்கான எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
Anura Karunathilake
By Sumithiran
விமானங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (18) துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிடம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவிக்கையில்,
விமான எரிபொருள் கையிருப்பு
கூட்டுத்தாபனம் எதிர்காலத்தில் மேலும் விமான எரிபொருள் கையிருப்புகளை ஓடர் செய்யும் என்று கூறினார்.

துறைமுகங்களில் கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூன்று தனியார் நிறுவனங்கள் எரிபொருளை வழங்கி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழக்கம் போல் தொடர்கின்றன என்று அமைச்சர் கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |