நகைகளை அடகு வைக்க உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய செய்தி
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானங்களை எடுத்துள்ளது.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மற்றும் மதிப்பு விகிதத்தை 70 சதவீதமாக குறைக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன் இந்த புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச வரையறை
இன்று முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் மதிப்பாக அதன் தற்போதைய சந்தை மதிப்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் புதிதாக வழங்கப்படும் தங்கக் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் தங்கக் கடன்கள் ஆகிய அனைத்திற்கும் இந்த 70 வீத அதிகபட்ச வரையறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கப்படும் நேரத்தில் செய்யப்படும் மதிப்பீடானது, பிணையாக வைக்கப்படும் தங்கத்தின் துல்லியமான மற்றும் நியாயமான மதிப்பை பிரதிபலிக்கிறது என்பதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |