ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரிட இஸ்ரேலுக்கு வந்துகுவியும் யூதர்கள்
ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் யூதர்கள் தற்போது இஸ்ரேலுக்கு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் அரபு நாடுகளுக்கு நடுவில் உள்ள ஒரே யூத நாடு இஸ்ரேல். உலகில் உள்ள ஒரே யூத நாடு இஸ்ரேல்.
உலகின் பல பாகங்களில் இருந்தும்
லொஸ் ஏஞ்சல்ஸ், நியுயோர்க், லண்டன், பாரிஸ், பாங்கொக், ஏதென்ஸில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் வரை வரும் விமானங்கள் ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்து இஸ்ரேலை காப்பாற்ற முன்வந்த இஸ்ரேலியர்களால் நிரம்பியுள்ளதாகவும்,அவர்கள் போர்க்களத்திற்கு செல்லவும் தயங்காமல் இருப்பதாக ஊடக அறிக்கைகள் விளக்கியுள்ளன.
அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட யூதர்கள் வழக்கமான பயணிகள் விமானங்கள் அல்லது பட்டய விமானங்கள் மூலம் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கு வந்துள்ளனர்.
இஸ்ரேல் அரசு விடுத்துள்ள அழைப்பு
இஸ்ரேல் அரசு 3,60,000 பேரை அந்நாட்டின் கூடுதல் ,இராணுவ பட்டாலியன்களில் பணிபுரிய அழைத்துள்ளதாகவும், வெளிநாட்டில் வசிக்கும் அவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே இஸ்ரேலுக்கு திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.