ஜெயராஜ் கொலையை திட்டமிட்டது கருணா, பிள்ளையான் - விமானப்படை அதிகாரி திடுக்கிடும் தகவல் (காணொலி)
கொலையின் பின்னணியில் ராஜபக்சாக்கள்
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சாக்கள் உள்ளதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணா, பிள்ளையான் கும்பல் தாக்குதலை திட்டமிட்டது
ராஜபக்சாக்களின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தெரிந்த போதிலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி இதை பேசவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இணைய நேர்காணலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க தனது கைத்தொலைபேசியுடன் சிறைச்சாலையில் இருந்ததாகவும், சிறைக் கட்டிலில் உறங்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் விடுதலை
இதேவேளை, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் செனரத் லக்ஷ்மன் குரே ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)