புடினின் வீட்டை குறி வைத்த 91 ட்ரோன்கள்...! ஆத்திரத்தின் உச்சத்தில் ட்ரம்ப்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி கண்டிக்கத்தக்கது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
புடினின் இல்லத்தின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவை நடுவானிலேயே ரஷ்யப் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இத்தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.
ட்ரோன்கள்
இந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இக்குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்தச் சூழலில், இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், "தனது வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக புடின் என்னிடம் தெரிவித்தார்.
இது சரியான முறையல்ல, இச்செயல் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |