வைத்தியசாலைக்குள் துப்பாக்கிச் சூடு! விசாரணைகள் தீவிரம்
நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இன்று காலை 6.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை நடந்த விசாரணைகளில், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணை
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக களுத்துறை குற்றப்பிரிவு, சிறப்புப் பணிக்குழு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர், கடந்த 29 ஆம் திகதி சிறையில் இருந்தபோது சிறைக் கைதிகள் குழுவால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையின் 14 ஆம் வார்டில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில், கால்களும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |