குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு
காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது.
நடமாடும் சேவை
ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார். உரிய அதிகாரி அதற்கு பதிலளிக்கையில், நீர்த்தாங்கி வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது.

குழாய் இணைப்புகளை முடித்த பின்னர் மார்ச் முதல் வாரத்தில் குடிநீரை வழங்குவோம். அத்துடன் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக நாங்கள் பிரதேச செயலகத்திடம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்துள்ளோம்.
அண்ணளவாக 3700 குடும்பங்கள் இங்கே இருந்தாலும் 500 குடும்பங்கள் அளவிலேயே இங்கே விண்ணப்பங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
அத்துடன் காரைநகர் பிரதேச மக்கள் 38 வீத மானியத்தில், 13 ஆயிரத்து 875 ரூபாவை செலுத்தி மக்கள் இநாத இணைப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
பெப்ரவரி மாதத்தில் நடமாடும் சேவையை இங்கே மேற்கொண்டு, இணைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலையை செய்கின்றோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |