வெளிநாடொன்றில் தவறான முடிவெடுத்த இலங்கை இளைஞன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
Sri Lanka
South Korea
Death
By Sumithiran
கொரியாவில் 13 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இலங்கை இளைஞனின் மரணத்திற்கு அவரது காதலியே காரணமென விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரியாவில் 13 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் மரணம் தொடர்பில் நீர்கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி டொக்டர் சிறி ஜயந்த விக்ரமரத்ன முன்னிலையில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இது தெரியவந்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொரியாவிற்கு சென்றவர்

லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளார்.
இறந்தவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக அவரது சகோதரர் சாட்சியம் அளித்துள்ளார். "சம்பந்தப்பட்ட பெண் விவகாரத்தை முடிக்க விரும்புவதாக எனது சகோதரருக்குத் தெரிவித்திருந்தார்," என்று அவர் கூறினார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி