ஐப்பானில் வேலைவாய்ப்பு: மக்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் பண மோசடி!
Matara
Sri Lanka Police Investigation
Japan
Money
By Laksi
ஜப்பானில் (Japan) வேலைபெற்றுத் தருவதாகக் கூறி 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சிரேஷ் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேகநபர் தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இவர் ஜப்பானிய மொழி ஆசிரியர் போல் நடித்து ஜப்பானுக்கு பணிக்கு அனுப்பி பலரிடம் இருந்து 5 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்