ஜோ பைடனின் அடுத்த திட்டம்! அதிருப்தியில் ட்ரம்பின் விசுவாசிகள்
america
joebiden
donald trump
By Vasanth
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக தான் துணை அதிபராக இருந்தபோது தனக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவல் படைக் குழுவினரை மீண்டும் அழைக்க அவர் விரும்புகிறார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, பல மூத்த பாதுகாவல் படை அதிகாரிகள் மீண்டும் பாதுகாப்புப் பணிக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதன்படி, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தற்போதுள்ள பாதுகாவல் படைக் குழுவினரை நீக்கிவிட்டு புதிய குழுவினரை நியமிப்பார்.
தற்போதைய பாதுகாவல் அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுவதால் பைடன் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி