ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 20 ஆண்டுகளின் பின் மனம் திறந்தார் டேவிற் பரராஜசிங்க
தனது தந்தை படுகொலைக்கான நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு உறுதி இல்லை என படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் (Joseph Pararajasingham) மகன் டேவிற் பரராஜசிங்கம் (David Pararajasingham) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் அக்கினி பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது தந்தையின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா எனக்கேட்டால் எப்போதும் எனக்கு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
காரணம், அதற்கு பின்னால் இருந்த பிள்ளையானை (Pillayan) வெரும் துருப்புச்சீட்டாகத்தான் நாங்கள் பார்க்கலாம் காரணம் அதற்கு பின்னால் இருந்ததே இலங்கை அரசுதான்.
அப்பாவின் படுகொலை என்பதை தாண்டி இலங்கையில் நடைபெற்ற அனைத்து கொலை மற்றும் குற்றங்களின் பிண்ணனியில் இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது ஆகையால் எனக்கு நீதி என்பதில் நம்பிக்கை இல்லை” என அவர் தெரித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசியல் களம், தமிழர் பிரதேச அரசியல் களம், தந்தையின் படுகொலையின் விரிவான பிண்ணனி, அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த முக்கியமான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அக்கினி பார்வை நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
