யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம்

Tamils Jaffna Journalists In Sri Lanka Selvarajah Kajendren
By Sathangani Jun 14, 2024 05:07 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு (sri lanka Intelligence Unit) இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தகவலறிந்து நேற்று (13) அங்கு சென்று பார்வையிட்ட  செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அதிபரின் யாழ் விஜயம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலுக்கு பின்னர் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கின்றது.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம் | Journalist Home Attack Jaffna Sl Intelligence Uni

எங்களைப் பொறுத்தவரையில் குறித்த தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியை மூடி மறைப்பதற்காக குறித்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

திருநங்கை சார்ந்த தரப்புக்களால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிபர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஊடகவியலாளர் பிரதீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதிபரின் நிகழ்வுகளில் அவரை அனுமதிக்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்புக்களால் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்ற நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

காவல்துறையினரின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

காவல்துறையினரின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

ஊடகவியலாளரால் முறைப்பாடு

இது தொடர்பில் சர்வதேச தூதரகங்கள், சர்வதேச ஊடக அமைப்புக்களுக்கு அவரால் முறைப்பாடு அனுப்பப்பட்டது.

2009இல் புனர்வாழ்வுக்கு பின்னர் பிரதீபன் ஊடகத்துறைக்குள் பிரவேசித்து 15 ஆண்டுகளாகின்றது. தென்னிலங்கையில் இருந்து வருகை தருபவர்களின் எத்தனையோ நிகழ்வுகளுக்கு செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம் | Journalist Home Attack Jaffna Sl Intelligence Uni

ஆனால் அதிபரின் நிகழ்வுக்கு அனுமதிக்காதமை வேண்டுமென்றே தம்மை அவமானப்படுத்த மேற்கொள்ளப்பட்டதாகவும், தனது தொழிலை சுதந்திரமாக செய்முடியாது நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் ஒரு சில ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது. அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பிரதீபனிடம் உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றது.

தாக்கப்பட்ட யாழ்.ஊடகவியலாளர் : கண்டித்துள்ள சுவிஸ் தமிழ் ஊடக மையம்

தாக்கப்பட்ட யாழ்.ஊடகவியலாளர் : கண்டித்துள்ள சுவிஸ் தமிழ் ஊடக மையம்

அரச புலனாய்வுப் பிரிவு

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம் | Journalist Home Attack Jaffna Sl Intelligence Uni

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியாமல் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதற்கு முழுப் பொறுப்பையும் அரச புலனாய்வுப் பிரிவினர் ஏற்கவேண்டும்.

முன்னாள் போராளிகள் 15 ஆண்டுகளுக்கு பின்னரும் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழலையே இது காட்டுகின்றது.” என தெரிவித்தார்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: விசாரணைகள் தீவிரம்

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: விசாரணைகள் தீவிரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025