முல்லைத்தீவில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்!
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (15-02-2026) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு
நிகழ்வின்போது மறைந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் திருவுருவப் படத்திற்குச் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன் மலர்மாலை அணிவித்ததுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடர் ஏற்றி வைத்தார்.
இதையடுத்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி இடம்பெற்றதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சுமந்தன் நினைவுரை வழங்கியுள்ளார்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான அ.நிக்சன், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்தி - சண்முகம் தவசீலன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






