சீன அரசின் கோரமுகம்! வெளிச்சத்திற்கு வந்த தகவல்
சீன அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகவியலாளர் ஜாங் ஜான் (Zhang Zhan) சிறையில் துயரங்களை அனுபவிப்பதாக அவரது விடுதலைக்காக போராடும் சட்டக் குழுவின் உறுப்பினர் ஜாங் கேகே கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய தொடக்கத்தில் வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றின் நடைபாதையில் வரிசையாக நோயாளிகள் இருந்த காட்சிகளை பகிர்ந்த அவர், வைரஸ் உருவாகி பரவியதன் யதார்த்தத்தை வெளிக்காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் உலகின் கவனத்தை ஈர்த்துடன், இந்த நடவடிக்கைகளுக்காக அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
37 வயதான அவருக்கு பிரச்சினைகளைத் தொடக்கி சிக்கல்களை உருவாக்கியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத தண்டனையை எதிர்த்து அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், ஜாங் மிகவும் மெலிந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.
நாசிக் குழாய்கள் வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாகவும், சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து, அவர் தனது தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறார்,” என்றும் ஜாங்கிற்காக போராடும் சட்டக் குழுவின் உறுப்பினர் ஜாங் கேகே கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர் மரணத்தை நெருங்கியுள்ளார் என அவரது சகோதரர் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து சர்வதேச மன்னிப்புச் சபை “அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், இதனால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அவருக்குத் தேவையான தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெறவும்” சீன அரசாங்கத்தை வலியுறுத்தியது.
எனினும், சிறையில் இருந்து அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் எனவும், அmவர் கடுமையாக பலவீனமடைந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.