யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani Oct 16, 2023 02:27 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு 50இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளதுடன் அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு  தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் காவல்துறையினர்  அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை

யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை


கைது செய்ய உத்தரவு

யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில்  சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளமை தொடர்பில் காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.

யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு | Judge Order Arrest 100 People Celebrated Birthday

அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி , மக்களின் இயல்வு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இருவரைக் கைது செய்து சனிக்கிழமை (14)  நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.

காசா பகுதியிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

காசா பகுதியிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்


அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் , சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என காவல்துறையினரைப்  பணித்துள்ளார்.

அதனை அடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதற்க்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இலங்கைக்கு வெள்ள அபாயம்..! அவசர எச்சரிக்கை

இலங்கைக்கு வெள்ள அபாயம்..! அவசர எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025