ரணிலை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு பதவி உயர்வு! எழுந்துள்ள குற்றச்சாட்டு
SJB
Mujibur Rahman
NPP Government
Ranil Wickremesinghe Arrested
By Dilakshan
ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். .
நாடாளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூல மீதான விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அமைச்சருக்கு எதிரான விசாரணை
அத்தோடு, அரசாங்க அமைச்சர் ஒருவர் கட்டிடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக வழக்கு விசாரணையை நடத்திய இரண்டு நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முஜிபுர் ரகுமான் வெளிப்படுதியுள்ளார்.
இதேவேளை, கல்கிஸ்ஸை நீதவான் இந்த அமைச்சரைக் கைது செய்ய இரண்டு முறை உத்தரவிட்ட போதிலும், காவல்துறை அந்த உத்தரவுகளை செயல்படுத்தாமல் தவிர்த்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுளளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
