வானொலி சேவையொன்றுக்கு எதிராக வழக்கு! பில்லியன் ரூபாய் கோரும் மொட்டு எம்பி
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, ஒரு வானொலி சேவை தனக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு (DMR 01083/25) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது மறைந்த மாமனார் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர் என்று வானொலி நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது தவறான அறிக்கை வெளியிடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சானக மாமனாரின் கொலை
இதன்படி, குறித்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அவதூறானது எனவும் சானக சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அந்த தவறான அறிக்கையை சரிசெய்து, அடுத்தடுத்த ஒளிபரப்புகளில் உண்மைகளை தெளிவுபடுத்துமாறு முன்னர் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வழக்கில் நீதிமன்றத்திற்குத் கூறியுள்ளார்.
அதன்படி, பொதுத் திருத்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கவும், அவதூறுக்கு ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றிடம் கோரப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 2023 இல், அப்போதைய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானகவின் மாமனார் தொழிலதிபர் லலித் வசந்த மெண்டிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாதாள உலக மோதல்
காலி, வுட்வர்ட் மாவத்தையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த அவர், டிக்மன் வீதி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், லலித் வசந்த மெண்டிஸ் பயணித்த காரை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர், கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது உயிழந்தார்.
இந்தக் கொலையைத் தொடர்ந்து, பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவு இது என்று பேச்சுக்கள் பரவியதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
