முப்படைகளையும் வரவழைக்க அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Armed Forces
Ministry of Defense Sri Lanka
Jagath Wickramaratne
By Dilakshan
பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப் படைகளை வரவழைக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரத்தமானியானது, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12 இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான நடைமுறை
எவ்வாறாயினும், ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க முப்படைகளையும்அழைக்கும் நடைமுறை, அடுத்தடுத்த வரும் அரசாங்கங்களால் தொடர்ச்சியான மேற்கொள்ளப்படும் நடைமுறையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
