மர்ம ட்ரோன்கள் நடமாட்டம்: வெளிநாடொன்றில் அவசரமான மூடப்பட்ட விமான நிலையங்கள்
டென்மார்க்கில் (Denmark) மர்ம ட்ரோன்கள் நடமாட்டத்தினால் சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இவ்வாறு ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் தாக்குதல் அச்சம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவின் பல நாடுகளில் சமீபத்தில், விமான சேவைக்கான தொழில்நுட்பத்தில் இணைய ஊடுறுவல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ட்ரோன் பதற்றம்
இந்தநிலையில், தற்போது டென்மார்க் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, டென்மார்க்கின் கோபன்ஹேகன் உட்பட பல விமான நிலையங்களில் ட்ரோன் நடமாட்டம் நேற்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விமான நிலையங்கள்
இதனால் சில விமான நிலையங்கள் சிறிது நேரம் மூடப்பட்ட நிலையில், வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமான நிலையம் நேற்று முழுதும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன், எஸ்ப்ஜெர்க் மற்றும் சோண்டர்போர்க்கில் உள்ள விமான நிலையங்களிலும் மற்றும் போர் விமானங்களின் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இராணுவ பகுதியான ஸ்க்ரிட்ஸ்ட்ரப் விமான தளத்திலும் ட்ரோன்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
